Sunday 27 April 2014

பகவான் ஸ்ரீ.ராமகிருஷ்ணரின் தெய்வீகக் காட்சி


ஒரு நாள் என் மனம் ஓர் ஒளிப்பாதை வழியாக மேலே சென்றது. சந்திரன், சூரியன், நட்சத்திரங்களுடன் கூடிய தூல உலகை விரைவாகக் கடந்து, எண்ணங்களால் ஆகிய நுண்ணுலகில் அது நுழைந்தது. மனம் அந்த உலகில் ஆழ்ந்து மேலே செல்லச்செல்ல பாதையின் இருபுறங்களிலும் பல்வேறு தேவதேவியர் உணர்வு திரண்ட உருவத்துடன் நின்றிருந்தனர். மனம் படிப்படியாக அந்தப் பகுதியின் இறுதியை அடைந்தது. அங்கே, அந்த உன்னத உலகில், தெய்வீக ஒளியினாலான உடம்புடன் கூடிய ஏழு ரிஷிகள் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தனர். ஞானம், புனிதம், தியானம், அன்பு என்று அனைத்திலும் அவர்கள் தேவதேவியரையும் விஞ்சியவர்களாக இருந்தனர்.

அந்த ரிஷிகளைப்பற்றியும் அவர்களின் மகிமையைப்பற்றியும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அந்த ஒளித்திரள் ஒரு குழந்தையாக உருவெடுத்தது. அந்த தெய்வீகக் குழந்தை அங்கு அமர்ந்திருந்த ரிஷிகளில் ஒருவரிடம் வந்து தன மென்மையான கைகளால் அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டு, வீணையை மிஞ்சும் அமுதக் குரலால் அந்த ரிஷியிடம்,             " நான் போகிறேன்". நீ என்னுடன் வரவேண்டும்" என்று கூறியது. அவரது கருணைமயமான கண்கள் இதயப்பூர்வமான இசைவினை வெளிப்படுத்தின. அப்போது ரிஷியின் உடல் மற்றும் மனத்தின் ஒரு பகுதி ஒலியுறுப்
பெற்று கீழே பூமியை நோக்கி விரைந்தது. நரேந்திரனைக் (சுவாமி   விவேகானந்தர்) கண்டதும், அவனே அந்த ரிஷி என்பதை அறிந்துகொண்டேன்...

Saturday 2 March 2013

சுவாமி விவேகனந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவில் (12.01.13) - கன்னியாகுமரி (அகில இந்திய விவேகானந்த கேந்திர மையம்)

Wake UP BHARAT! ENLIGHTEN THE WORLD!!

பாரதமே விழித்தெழு!உலகை ஒளியூட்ட செய்!!




எனது குருநாதரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் செல்லும்பொழுது, கடற்கரைக்கு அருகிலேயே உள்ள பளிங்கு கல்லில் உறங்கிவிடுவது வழக்கம். உணவகத்திலோ, தங்கும் விடுதியிலோ அறை  எடுத்து தங்குவது கிடையாது.அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து, நினைவு பாறையை நோக்கி சுமார் ஒரு மணி நேரம் சுவாமிஜியை நினைத்து தியானிக்கும்போது, எல்லையற்ற ஆன்மிக பலத்தை சுவாமிஜி அவர்கள் அருள்வது போன்று ஒரு பிரமை ஏற்படும். அவருடைய ஆன்மிக பலம்தான் கடந்த 14 வருங்டங்களாக என்னை சிறப்புடன் இயக்கி கொண்டிருக்கிறது. அவருடைய இலட்சியங்கள், கனவுகளை நனவாக்க எளியவனான என்னுடைய ஆன்மாவை அவருக்கு சமர்ப்பணம் செய்யும் நாளை எதிர்நோக்கி கொண்டிருக்கிறேன்..!!


அதிகாலை பொழுது (4.00 am) குமரி முனையிலுள்ள விவேகனந்தர் பாறை நினைவு தோற்றம்...















பஞ்சாப்பிலுள்ள பாட்டியாலா பல்கலைக்கழக சட்டக்கல்லூரி மாணவர் ~ விக்ரம்சிங்.ஒவ்வொரு வருடமும் விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவில் தவறாமல் கலந்து கொள்வார்.நான் 2009 வருடம் சந்தித்தேன்.கடந்த நான்கு வருடங்களாக மின்னஞ்சலிலும்,அலைபேசியிலும் நட்பு கொண்டுள்ளேன்.






02.09.1982 அன்று இந்த பிரபஞ்சத்தில் என்னுடைய தாய் என்னை ஈன்றெடுத்தாள்.செப்டம்பர் 2,1982 - வியாழக்கிழமையில் ஜனனம் செய்ததை எண்ணி நான் தினமும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது பாரத தேசத்தின் உலகப் புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவை உருவாக்கியவர் ஏக்நாத்ஜி ரானடே அவர்கள்.அவர் நான் பிறந்த வருடமான 1982 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் நாள் இந்த பூவுலக வாழ்வை நீத்து,சிவபதவி அடைந்தார்கள்.
அவர் சிவபதவி அடைந்து 11 வது நாள்-SEP 02,1982,எளியவனாகிய நான் இந்த பூவுலகில் ஜனனம் செய்ததை எண்ணி ஒவ்வொரு நாளும் பூரிப்படைகின்றேன்.

சுவாமி.விவேகானந்தர் அவர்கள் SEPTEMBER 11,1893 ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் உரைநிகழ்த்திய நாள் வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.உலக அமைதியை குறித்து உரைநிகழ்த்திய ஒப்பற்ற நிகழ்வு.

அதே செப்டம்பர் 11,2001 ~ வியாழக்கிழமை, அதே அமெரிக்காவிலுள்ள நியுயார்க் நகரிலுள்ள இரட்டை வர்த்தக கோபுரங்கள் தகர்க்கப்பட்டது என்பது அழிவை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்ட ஒரு சோக நிகழ்வு.திட்டமிட்டே ஒசாமா பின்லாடன் இந்த தினத்தை 1991 ம் ஆண்டே தெர்தேடுத்தான் என்பது ஆழ்ந்து சிந்திக்ககூடியதாக உள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் முன்கூட்டியே நடக்கப்போவதாக 1555 ம் வருடத்திலேயே,நாஸ்டர்டாமஸ் என்ற பிரெஞ்சு நாட்டை சேர்ந்த தீர்க்கத்தரிசி(Prophet)  தன்னுடைய "நூற்றாண்டுகளின் நிகழ்வுகள்" என்ற தீர்க்க தரிசன புத்தகத்தில் எழுதியுள்ளார் என்பது மேலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.


இந்த சிலை முன்னாள் உள்ள வாசலில் உள்ள காவலாளிகளை மீறி புகைப்படம் எடுப்பதற்கு சுமார் அரைமணிநேரம் போரட வேண்டியிருந்தது. புகைப்படம் எடுத்த பிறகு,ஏனோ தெரியவில்லை என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் என் உடலை நனைத்தது. எனது குருநாதர்  அன்றைய தினம் உருவச்சிலையில் கம்பீரமாக நிற்பதை இந்த வலைப்பூ நூற்றாண்டுகளையும் கடந்து பிரதிபலித்துக்கொண்டே இருக்கும்.அவருடைய தீர்க்கமான பார்வை உலகம் முழுவதும் இந்த வலைப்பூ மூலம் கோடான கோடி மக்களின் கண்களையும்,இதயங்களையும் வசீகரிக்கும் என்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். இதை நான் அவருடைய கோடிக்கணக்கான சீடர்களில் ஒருவனாக, அவருக்கு செய்யும் ஒரு சிறு தொண்டு!! 
என்னுடைய புகைப்பட கருவியில் ஊடுருவிச் சென்று,இந்த வலைப்பூவில் சூரியனாக ஒளி வீசிக்கொண்டிருக்கிறார்.


சுவாமி விவேகனந்தர் இந்த பாறையில்தான்(மேலே) 1892 டிசம்பர் 24,25,26 தேதிகளில் அமர்ந்து தவம் இருந்ததாக கருதப்படுகிறது.அதன்பிறகு 1893 ம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மகாசபை மாநாட்டில் கலந்து கொண்டார். அவரை உலகமறிய செய்த பெருமை ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னனையே சாரும்.




                  இடதுபுறம் நிற்பவர் ~ Dr.Manjit  Singh Nijjar M.A.,L.L.M.,Ph.D.
                                               Professor,Department Of Law,
                                        Panjab University,Pattiala. 
                           Ph:0175-3046286

வலது புறம் நிற்பவர் ~  Dr.Mukesh K.Thakar 
                                                      Professor & Former Head 
                                                                  Department Of Forensic Science,
                                                    Panjab University,Pattiala.

இவர்கள் இருவரும் விவேகனந்த கேந்திரத்தில் உள்ள பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் Wake up bharat!Enlighten the World!! என்ற தலைப்பில் எழுச்சியூட்டும் உரை நிகழ்த்தினார்கள்.விவேகானந்தரின் கொள்கைகளை இலக்கிய ஆங்கில மொழியில் அருவியாக பொழிந்தார்கள்.கடந்த 3 வருடங்களாக ஆருயிர் நண்பர்களாக எனக்கு வழிகாட்டியாக உள்ளனர்.





மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நாக்பூர் பள்ளி மாணவர்கள்...


























சுவாமி விவேகானந்தருடைய 175 வது பிறந்த வருடத்தில் இந்தியா உலைகையே வென்று,பாரதத்தாயின் மகனான விவேகானந்தரின் கனவை தென்னிந்திய இளைஞர்கள் அவர்க்கு சமர்ப்பணம் செய்வார்கள்.

இந்த சுவரொட்டி பலகை விவேகானந்த கேந்திர நுழைவாயிலில் உள்ளது...